×

திருவாடானை அருகே கார் மீது பஸ் மோதல்

திருவாடானை,செப்.12: ராமநாதபுரம் அகில் கிடங்கு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ஹென்றி பிரின்ஸ்(55). இவர் நேற்று காரில் மனைவியுடன் தேவகோட்டையில் இருந்து ராமநாதபுரம் செல்வதற்காக திருவாடானை அருகே கருமொழி சோதனைச்சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து தேவகோட்டை நோக்கி வந்த தனியார் பேருந்து கார் மீது மோதியது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த டாக்டர் ஹென்றி பிரின்ஸ் காயமின்றியும், அவரது மனைவி லேசான காயத்துடனும் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை போலீசார் விபத்தில் காயமடைந்தவரை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருவாடானை அருகே கார் மீது பஸ் மோதல் appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Dr. ,Henry Prince ,Ramanathapuram Akhil Kitangu ,Devakottai ,Thiruvadan ,
× RELATED திருவாடானை அருகே தீப்பிடித்து எரிந்த வைக்கோல்